அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 12.30மணியளவில் குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலர் ராமர் கோவில் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
தனியார் கோயில்களில் நேரலை – போலீசார் அனுமதி தேவையில்லை!
இந்த விழாவை நேரடியாக காண இந்தியாவில் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள், பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் , அன்னதானம் என பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் என பல்வேறு நிறுவனங்கள் அரை நாள் விடுமுறையை அறிவித்துள்ளன.
அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஆனால், சிறப்பு பூஜைகள் நடத்த தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழக அரசு இன்று கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுக்கிறது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்டது.
தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், தமிழகத்தில் அரசு இன்று ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை என கூறியது. அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கில் எதிர்மனுதாரர் யார் என வழக்கு தொடர்ந்தவர்கள் குறிப்பிடவில்லை என்றும், யார் எந்த இடத்தில் அனுமதி மறுத்தார்கள் என்றும் விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்த பாஜக தரப்பிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே போல , தமிழக அரசு இந்த விவகாரம் குறித்து முழு விளக்கத்தை, அதாவது , எந்த இடத்தில் எதற்காக யார் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுத்தார்கள், அதற்கான காரணம் என்ன என்பது பற்றிய விளக்கத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…