பொது இடங்களில் ராமர் கோவில் நேரலைக்கு தடை..!
அயோத்தியில் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கட்டுமானப் பணிகள் முடிந்தது. இந்நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நாளை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாடு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உத்திரபிரதேச முதல்வர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். நாளை மதியம் 12.20 மணியளவில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெறவுள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு பல மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞரணி மாநாட்டை திசை திருப்பும் நோக்கம்- அமைச்சர் சேகர்பாபு..!
இதற்கிடையில் நாளை அயோத்தி கோயில் குடமுழுக்கு நேரலையை கோவில்களில் ஒளிபரப்பவும், சிறப்பு பூஜைகள் நடத்தவும் காவல்துறையை அனுமதி மறுப்பது கண்டத்துக்குரியது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை, பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. இந்து விரோத, வெறுக்கத்தக்க செயல் கண்டனத்திற்குரியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை செய்ய அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலையை திருமண மண்டபம், பொது இடங்களில் நேரலை செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் அறக்கட்டளை கோயில்கள், மடங்களில் ராமர் கோவில் நிகழ்ச்சியை நேரலை செய்யலாம். மேலும் கோயில்களில் அறங்காவல் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் நேரலை ஒளிபரப்பு தமிழக அரசு தடை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.