ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே.! வித்தியாசமான முறையில் புதுமண தம்பதிகளுக்கு அசத்தல் அன்பளிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பலவேறு விதமாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • இந்நிலையில், கடலூர் திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு அவரது நண்பர்கள் ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே என ஒருங்கிணைந்து சொல்லுவோம் No CAA, No NRC என்ற வாசகத்தை அச்சிட்டு அன்பளிப்பை வழங்கினர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள், பெரியவர்கள் பலர் சென்னை பெசன்ட் நகரில் கோலம் மூலம் NO CAA, NO NRC என எதிர்ப்பை தெரிவித்தனர் அவர்களை கைது செய்து, விடுவித்தனர். அதை தொடர்ந்து திமுக தலைவர் வீட்டில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதுபோல விசிக தலைவர் திருமாவளவன் கோலம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று பல்வேறு விதமாக மக்கள், அரசியவாதிகள் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் ஷஃபத்- ஷாஹின் மணமக்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ஏராளமான உறவினர்களிடையே இந்து, கிறிஸ்துவ நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றனர். மணமக்களுக்கு அவரது நண்பர்கள் வழங்கிய அன்பளிப்பில், ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே என ஒருங்கிணைந்து சொல்லுவோம் No CAA, No NRC என்ற வாசகத்தை அச்சிட்டு அன்பளிப்பை வழங்கினர்.

மேலும் நம்மை யாராலும் பிரிக்க முடியாது. எனவே, நாம் ஒற்றுமையாக இருப்போம். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்றுமே இந்தியர்களே, ஒற்றுமையே நமது பலம் என நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

5 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

7 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

7 hours ago