ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே.! வித்தியாசமான முறையில் புதுமண தம்பதிகளுக்கு அசத்தல் அன்பளிப்பு.!
- நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பலவேறு விதமாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில், கடலூர் திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு அவரது நண்பர்கள் ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே என ஒருங்கிணைந்து சொல்லுவோம் No CAA, No NRC என்ற வாசகத்தை அச்சிட்டு அன்பளிப்பை வழங்கினர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள், பெரியவர்கள் பலர் சென்னை பெசன்ட் நகரில் கோலம் மூலம் NO CAA, NO NRC என எதிர்ப்பை தெரிவித்தனர் அவர்களை கைது செய்து, விடுவித்தனர். அதை தொடர்ந்து திமுக தலைவர் வீட்டில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதுபோல விசிக தலைவர் திருமாவளவன் கோலம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று பல்வேறு விதமாக மக்கள், அரசியவாதிகள் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் ஷஃபத்- ஷாஹின் மணமக்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ஏராளமான உறவினர்களிடையே இந்து, கிறிஸ்துவ நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றனர். மணமக்களுக்கு அவரது நண்பர்கள் வழங்கிய அன்பளிப்பில், ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே என ஒருங்கிணைந்து சொல்லுவோம் No CAA, No NRC என்ற வாசகத்தை அச்சிட்டு அன்பளிப்பை வழங்கினர்.
மேலும் நம்மை யாராலும் பிரிக்க முடியாது. எனவே, நாம் ஒற்றுமையாக இருப்போம். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்றுமே இந்தியர்களே, ஒற்றுமையே நமது பலம் என நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.