ராமர் நமது தேசிய அடையாளம்… வீடியோ வெளியிட்ட ஆளுநர் ரவி!
நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனிடையே, குடியரசு தினவிழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து காணொளி மூலம் உரையாற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் ஆளுநர் கூறியதாவது, தமிழக மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நம் நாட்டினை அந்நிய ஆட்சியிடமிருந்து மீட்டு, நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்த சுதந்திர போராட்ட உயிர்தியாகிகளுக்கு என் அஞ்சலியை செலுத்திக்கிறேன். நமது ராணுவம், பாதுகாப்பு அமைப்பு மற்றும் காவல்துறையினர் இடைவிடாத விழிப்புடன் இருந்து பல்வேறு தியாகங்களை புரிந்து நமது நாட்டின் இறையாண்மையையும், ஆள்புல கட்டுறுதியையும் பாதுகாக்கிறார்கள்.
Republic Day 2024 : சென்னையில் குடியரசு தினவிழா…. ஆளுநர் R.N.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை.!
மேலும், உள்நாட்டில் அமைதி, சமூக நல்லிணக்கம் உறுதி செய்து, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். தலை சிறந்த சேவைகளை செய்த தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ் தொண்டு நிறுவனங்களுக்கு எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். சந்திரயான் 3, ஆத்யா எல் 1 ஆகியவை மூலம் நமது விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமையை தேடி தந்துள்ளார்கள்.
பல்வேறு பதக்கங்களை வென்று கொடுத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன் என கூறி பெண்களுக்கு இடதுகீடு, ஐஎன்எஸ் போர் கப்பல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆளுநர் எடுத்துரைத்தார். தொடர்ந்து கூறியதாவது, உலகின் பெரிய பொருளாதாரங்களில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக பாரதம் உள்ளது என்றும் உலக பொருளாதார பட்டியலில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2023ம் ஆண்டில் பல அற்புதமான சாதனைகளை நாடு படைத்திருப்பதாகவும், ராமர் நமது தேசிய அடையாளமாகவும், உத்வேகமாகவும் இருந்ததாகவும் கூறினார். அதாவது, ராமர் நமது தேசிய சின்னமாக, உத்வேகமாக இருந்து வந்திருக்கிறார். பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும் வசம் செய்யும் அவர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருக்கிறார். ராமராஜ்ஜியத்தின் நல்லாட்சி மற்றும் அவரது லட்சியங்கள், நமது இந்திய அரசியலமைப்பில் உள்ளது. எனவே, உலகின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முழுமையான திறன் கொண்ட நாட்டை உருவாக்க தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம் எனவும் கூறினார்.
ஆளுநர் ரவி அவர்களின் 75வது குடியரசு தின விழா உரை.
Governor Ravi’s address on 75th Republic Day.https://t.co/GYzQJRplAF@rashtrapatibhvn @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @EBSB_Edumin @IndiaSports @isro @HSVB2047 @PIB_India @PIBCulture @pibchennai @DDNewslive…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 26, 2024