#BREAKING : ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி – எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5500 பேர் மீது வழக்குப்பதிவு..!
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5500 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
திமுக அரசை கண்டித்து சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக சென்று, விஷச்சாராய மரணம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 5500 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.