காந்தியையும், அண்ணாவையும் விமர்சித்த உலகம் மணிரத்னத்தை விட்டு வைக்காது.! திருச்சி சிவா அறிக்கை.!
பொன்னியின் செல்வன் படம் பற்றிய பாராட்டு அறிக்கையில் திருச்சி சிவா, ‘ இடதுசாரி பக்கம் நிற்கும் மணிரத்னம் மீது விமர்சனம் வைக்கப்படுவதை பார்த்தேன். காந்தி, அண்ணாவை விமர்சனம் செய்த உலகம் இது. இதில் விசித்திரம் ஏதுமில்லை.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு வரவேற்பும், வசூலும் நல்லவிதமாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த படம் குறித்து திமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில் , ‘ நான் எனது கல்லூரி காலத்தில் நிறைய முறை பொன்னியின் செல்வன் நாவலை படித்துள்ள்ளேன். ஒரே மூச்சில் இந்த நாவலை நான் படித்தேன். வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, ஆழ்வார்க்கடியாள் ஆகிய பாத்திரங்கள் ஏற்று நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.
இணையத்தில் எதிர்மறை விமர்சனங்களையும் கண்டேன். கட்டிய வீட்டிற்கு குற்றம் சொல்ல ஆட்கள் நிறைய வருவார்கள். ஜெயமோகனின் வசனங்களை ரசித்தேன். இடதுசாரி பக்கம் நிற்கும் மணிரத்னம் மீது விமர்சனம் வைக்கப்படுவதை பார்த்தேன். காந்தி, அண்ணாவை விமர்சனம் செய்த உலகம் இது. இதில் விசித்திரம் ஏதுமில்லை.
நான் எழுதிய பாராட்டிற்கும் விமர்சனங்கள் வரும் என்று உணர்ந்தே இந்த பாராட்டு கடிதத்தையும் எழுதுகிறேன். என தனது பாராட்டு அறிக்கையில் குறிப்பிட்டுளளார் மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா.
#ponniyinselvan @hasinimani @actor_jayamravi @trishtrashers @rparthiepan @realsarathkumar @Karthi_Offl pic.twitter.com/w7tSIz7iM9
— Tiruchi Siva (@tiruchisiva) October 3, 2022