மாநிலங்களவை தேர்தல்.! சட்டசபை செயலாளர் தேர்தல் அதிகாரியாக நியமனம்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் அடுத்தமாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் தேர்தலுக்காக தமிழ்நாடு சட்டசபை செயலாளர் (கி.சீனிவாசன்) தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் மொத்தமாக 17 மாநிலங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் அந்த இடங்களை நிரப்புவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் அடுத்தமாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 06-தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.16-ம் தேதி வேட்புமனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு தாக்கல் திரும்பப்பெற 18-ம் தேதி என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நடந்த 26-ம் தேதி மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்தத் தேர்தலுக்காக தமிழ்நாடு சட்டசபை செயலாளர் (கி.சீனிவாசன்) தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், கூடுதல் செயலாளர் (பா.சுப்பிரமணியம்) தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)