அரசியலில் வெற்றிடத்தை ரஜினி காந்த் நிரப்புவார் – மு. க. அழகிரி பேட்டி
அரசியலில் வெற்றிடத்தை ரஜினி காந்த் நிரப்புவார் என்று மு. க. அழகிரி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி மறைவிற்கு பின் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் திமுகவில் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.
ஆனால் சமீபத்திய பேட்டிகளில் திமுக குறித்த கருத்தை தெரிவிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்.அதற்கு ஏற்றவகையில் பேட்டி ஒன்றில் ,நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. என்னிடம் ஏன் திமுக பற்றி கேட்கிறீர்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து ஓன்று பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.அதாவது தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மு. க. அழகிரி ரஜினியின் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,ரஜினி கூறியதுபோல தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது.அரசியல் வெற்றிடத்தை ரஜினி காந்த் நிரப்புவார் என்று தெரிவித்துள்ளார்.