ராஜீவ் காந்தி கொலை வழக்கு .. ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் நீதிமன்றத்தில் மனு ..!
கடந்தாண்டு நவம்பர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதில் பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் இந்திய குடியுரிமை பெற்றதால் அவர்கள் தங்களின் வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
முருகன், சாந்தன், ராப்ர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கை குடியுரிமைகொண்வர்கள் என்பதால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படாமல் திருச்சி மத்திய ஜெயில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், திருச்சி அகதிகள் முகாமிற்கு வந்து ஓராண்டு ஆன நிலையில் இங்கிருந்து தங்களை விடுவிக்க கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்த மனுவில் 32 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றத்தால் விடுதலை ஆனபோதும் காவல் தொடர்கிறது. அகதிகள் முகாமில் காவலில் இருப்பது சிறையை விட கொடுமையாக உள்ளது என தெரிவித்தனர். நெதர்லாந்து வசிக்கும் மனைவி, மகனுடன் வாசிக்க விரும்புவதாக ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.
இருவரின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற மதுரை கிளையில் நாளை விசாரணை வருகிறது. 4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.