ராஜீவ் காந்தியின் 30ம் ஆண்டு நினைவு நாள்..! அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ராஜீவ் காந்தியின் 30ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று ராஜீவ் காந்தி மறைந்து 30ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.இதனையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும்,ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரேந்திர சிங் ஆகியோரும் ராஜீவ் காந்தி நினைவுநாளையொட்டி மரியாதை செய்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து,நாட்டின் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரடி ஆய்வு நடத்த பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,திருச்சி ரயில் நிலையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 30-ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.