ராஜீவ் காந்தி கொலை வழக்கு..வேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி.!

Default Image

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் குற்றவாளி நளினி நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். நளினி வேலூர் பெண்கள் சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் புகலேந்தி கூறுகையில், நளினிக்கும் இன்னொரு ஆயுள் குற்றவாளிக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற கைதி இந்த பிரச்சினையை ஜெயிலரிடம் கூறினார். அதைத் தொடர்ந்து நளினி தற்கொலைக்கு முயன்றார் என்று வழக்கறிஞர் கூறினார்.

இதற்கு முன்பு நளினி இதுபோன்ற எதையும் செய்யவில்லை என்றும் எனவே “உண்மையான காரணத்தை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என புகலந்தி வலியுறுத்தினார்.

ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினியும்,  அவரது கணவர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ளனர். வேலூர் சிறையில் பல வகையில் துன்புறுத்தல்கள் அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி தங்களை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என நளினி, முருகன் ஆகிய இருவரும் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், இந்த கோரிக்கை மீது சிறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை 1991 மே 21 அன்று  ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பேரணியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி மற்றும் அவரது கணவர் உட்பட ஏழு பேர் சிறப்பு தடா நீதிமன்றத்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்