நிறைவேறாத கனவு… ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் சென்னையில் காலமானார்.!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இவர் இளைஞர் தமிழர் என்பதால் திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
Read More – தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது- பிரதமர் மோடி ..!
ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன், கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி உடல்நல பாதிப்பு அதிகமாகி திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இலங்கை தமிழர் சாந்தன், தனது தாயாரை பார்க்க இலங்கை செல்ல அனுமதி கேட்டிருந்தார். அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து இருந்தது. இந்த வாரம் அவர் இலங்கை செல்ல இருந்தார். இந்த நிலையில் தான் சாந்தன் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னைக்கு மாற்றப்பட்டார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற சாந்தன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இறுதியில் தனது தாயாரை பார்க்காமலே சாந்தன் உயிரிழந்துவிட்டார்.