தேமுதிக ராஜீவ் கொலை வழக்கில், நீதிமன்றம் சட்டரீதியாக எடுக்கும் முடிவையே ஆதரிக்கும்!

Default Image

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை ராகுல்காந்தி, ப்ரியங்கா ஆகியோர் மன்னிப்பதாகக் கூறியிருந்தாலும், நீதிமன்றம் சட்டரீதியாக எடுக்கும் முடிவையே தேமுதிக ஆதரிக்கும் என பிரேமலதாவிஜயகாந்த் கூறியுள்ளார்.

இதற்கு முன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி கொலைகளில் தொடர்புடையவர்களை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு ராகுல்காந்தி பேட்டி அளித்துள்ளார். அதில்,தங்கள் கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்காகவே இந்திரா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை இழக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி தனது மரணத்தை அறிந்திருந்தார் என்று குறிப்பிட்ட அவர், ராஜீவ்காந்தியிடம் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை தாம் கூறியதையும் நினைவுகூர்ந்தார்.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, அப்போது காங்கிரஸ் கட்சி கடும் ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறினார். இப்பிரச்சினையில் தமது தனிப்பட்ட கருத்தைக் கூற முடியாது என்றும், கட்சியின் முடிவுக்குத் தாம் கட்டுப்படுவதாகவும் ராகுல்காந்தி கூறினார். இரு படுகொலை சம்பவங்களிலும் யாரையும் வெறுக்கக் கூடாது என்று தாம் முடிவு எடுத்ததாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உடலை தொலைக்காட்சிகளில் பார்த்த போது, தமது மனத்தில் இருவேறு எண்ணங்கள் உதித்ததாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். ஒரு மனிதரை இப்படி துன்புறுத்தி கொல்லவேண்டுமா என தாம் எண்ணியதாகவும் அவரது குடும்பம், குழந்தைக்காக தாம் வேதனைப்பட்டதாகவும் ராகுல் குறிப்பிட்டார். தந்தையின் கொலைக்கு காரணமானவர் என்பதற்காக மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்பதை தானும், பிரியங்காவும் உணர்ந்ததாக ராகுல் தெரிவித்தார். பல ஆண்டுகளாக தந்தையை இழந்த வேதனையுடன் இருந்த போதும் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக, ராகுல் காந்தி தனது பேட்டியில் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்