பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தன்னை விடுவிக்கக்கோரியும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதனிடையே கடந்த 22-ஆம் தேதி விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை வரும் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அளித்த கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில்,வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…