ராஜீவ் கொலை வழக்கு -புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் ராபர்ட் பயஸ்
30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் இருந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் ராபர்ட் பயஸ்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவரான ராபர்ட் பயஸ் பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இவரது மனுவில் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாட்கள் பரோல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் , ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் இருந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் ராபர்ட் பயஸ்.நளினி சிறையில் இருந்து வெளியே வந்தபோது பின்பற்றிய விதிகளை பின்பற்றவும் நீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.