இரண்டையும் தனித்தனியாக பிரிக்க ரஜினி திட்டம் – காந்திய மக்கள் இயக்க தலைவர் பரபரப்பு தகவல்.!
விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன? என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார். அப்போது ரஜினி தன்னிடம் மாற்று அரசியல் என்று கூறுகிறீர்கள். மாற்று அரசியலின் முதல் படியிலாவது நான் கால்வைக்க வேண்டாமா என்று கேட்டுவிட்டு, கட்சியையும் ஆட்சியையும் தனித்தனியாக பிரிக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அரசியலை தூய்மைப்படுத்தவே ரஜினி அரசியலுக்கு வருகிறார்.
இதுபோல திமுகவில் ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம். அதிமுகவினர் தற்போது ஒவ்வொரு துறையிலும் எப்படி வருவாய் ஈட்டலாம் என திமுகவுக்குக் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு உள்ளனர். இதனால்தான் திமுக ஆட்சிக்கு வர துடிக்கிறது. சிஏஏ சட்டம் மூலம் ஒருவரை நாட்டிலிருந்து வெளியேற்ற முடியும் என்று நிரூபிக்கத் தயாரா? இதைத்தான் ரஜினி சொல்கிறார். அப்படி நிரூபித்தால் முதல் ஆளாக ரஜினியாகத்தான் இருப்பார் என்று கூறினார். இதனிடையே சில நாட்களுக்கு முன் ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து தமிழருமணியன் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.