ரஜினி சொல்லும் அதிசயம் நடக்காது -அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி சொல்லும் எந்த அதிசயமும் தமிழகத்தில் நடக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,தமிழகத்தின் முதல்வராகுவேன் என்று பழனிசாமி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.ஆனால் அந்த அதிசயம் நடந்தது.மேலும் அதிசயம் நேற்றும் நடந்தது,நாளையும் அதிசயம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து சென்னை தி.நகரில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம்.
எங்கள் மீது கல்லெறிந்தால், அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும்.ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிசயம் நடந்தது .ரஜினி சொல்லும் எந்த அதிசயமும் தமிழகத்தில் நடக்காது என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025