ரஜினியின் ஆசீர்வாதம் மட்டுமே போதும், விரைவில் மாற்றத்தின் சேவகனாக நான் உங்கள் முன் – அர்ஜுனமூர்த்தி

Default Image

ரஜினிகாந்த் ஆசீர்வாதம் மட்டுமே போதும், மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன் என்று அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றத்தின் பயணம் விரைவில் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்னை நமது நாட்டிற்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. நமது தலைவருக்கு உடல் நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக, அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் வேதனை அடைந்தேன்.

இதனை ஈடுசெய்யும் வகையில், ரஜினிகாந்தின் நீண்ட கால அரசியல் மாற்றத்திற்கு நினைவானது நிச்சியமாக நிகழவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்போது என்று சொல்லிய ரஜினிகாந்தின் நல்ல எண்ணம், நல்ல மனது தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள்.

நமது தலைவர் ஒரு நடிகராக, அவரது தொழில் தர்மத்தின் காரணமாக அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் வரக்கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர், புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என விரும்புகிறேன். என்னை அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.

ரஜினிகாந்த் தலைவர் என்பதையும் தாண்டி நானும் ஒரு ரசிகன் என்று பெருமை கொள்கிறேன். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கேட்ட பெயரை நாம் ஏற்படுத்தமாட்டோம். ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் மட்டுமே போதும். அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். விரைவில் மாற்றத்தின் சேவகனாக நான் உங்கள் முன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்