பியர் கிரில்ஸ் உடன் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் தேதி அறிவிப்பு

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ .இந்த நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பியர் கிரில்ஸ் காடுகளில் ஆபத்தான சூழ்நிலைகளில்இருந்து எப்படி உயிர் பிழைப்பது , எப்படித் தப்பி வருவது என விளக்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.இதற்கான படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
‘பியர் கிரில்ஸ் உடன் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் வருகின்ற மார்ச் 23-ம் தேதி இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று டிஸ்கவரி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025