தினகரனுக்கு நடந்த நிலைதான் ரஜினிக்கும் நடக்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அப்பொழுது அவர் கூறுகையில் , முதலமைச்சர் மீதான வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்து ஸ்டாலின் விமர்சனம் செய்வது குறித்து பேசிய அவர் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாத காரணத்தால் வயிற்று எரிச்சலில் விமர்சனம் செய்கிறார்.
மேலும் ஸ்டாலின் 20 தொகுதியை பிடிப்பதே கடினம் அதிமுக மட்டுமே 200 தொகுதிகளை பெறக்கூடிய வல்லமை உடைய கட்சி . நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்க உள்ளது குறித்த கேள்விக்கு , அவர் பதில் கூறுகையில், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.
ஆனால் வாக்கு சதவீதத்தை பெறவேண்டும் 2021 தேர்தலில் அதிமுக மட்டுமே 48 சதவீதம் வரை வாக்குகளை பெற முடியும். புதிய கட்சி தொடங்கி 5% பெற்ற தினகரனுக்கு நடந்த நிலைதான் ரஜினிக்கும் நடக்கும்.பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டி மட்டுமே காரணம் என்று கூறுவது தவறானது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025