ராகவேந்திரா மண்டபத்தில் மீண்டும் ரஜினிகாந்த் ஆலோசனை ..!
புதியதாக கட்சி தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்து ரஜினி தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார். ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.