அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். புது வருட பிறப்பை பலரும் இந்த வருடம் இனிய வருடமாக அமையட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி புத்தாண்டு வாழ்த்துக் கூறியதை அப்போலோ நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அண்ணாத்த படப்பிடிப்பில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகடிவ் என்று வந்தது. இதையடுத்து, ரத்த அழுத்தம் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் உடல்நலம் தேறி மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…