இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் நடிகர் ரஜினிகாந்த் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையின் போது,அரசியலில் பதவிக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணியளவில் நிறைவுபெற்றுள்ளது.இதனால், ரஜினியின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனைக்கு பின்னர் தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் தலைவர் ரஜினியிடம் இருந்து அறிவிப்பு வரும். தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் கட்டுப்படுவோம் என்று கூறியுள்ளார்.
சென்னை : நேற்று தினம் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில்…
டெல்லி : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியை லக்னோ அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக வெடித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல்…
சென்னை : சினிமாத்துறையில் விவாகரத்து செய்திகள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே, தனுஷ், இசையமைப்பாளர்…
ஹைதிராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் இப்படி அதிரடியாக இருக்கனும் என ஒரு காலத்தில் பெங்களூர் காட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இப்போது…