தனித்தனியாக நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்.! பிரதமர் மோடி முதல் மு.க.ஸ்டாலின் வரை…
தான் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பகுதியில் வீக்கம் இருந்தது.பின்னர் அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமுடன் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகரும் தவெக தலைவருமான விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
தான் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ள நிலையில், தனது உடல்நிலை சீரடைந்து விரைவில் வீடு திரும்ப வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் தனித்தனியாக தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி :
எனது அன்பான மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு., என் உடல்நலம் பற்றி தனிப்பட்ட முறையில் விசாரித்த உங்கள் அக்கறைக்கு என் மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.
My dear honourable Prime Minister Shri @narendramodi ji … my heartfelt thanks to you for your care and concern regarding my health and checking on me personally 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :
நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் குறித்த விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு @mkstalin மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
சந்திரபாபு நாயுடு :
நான் விரைவில் குணமடைய வாழ்த்திய எனது அன்பு நண்பரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி.
Thanking My dear friend and honourable Chief Minister Shri @ncbn Chandra babu Naidu garu for wishing me a speedy recovery 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
ஆளுநர் ஆர்.என்.ரவி :
என் உடல்நிலை குறித்து விசாரித்ததற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி.
Thanking the honourable Governor of Tamil Nadu @rajbhavan_tn Shri Mr Ravi for enquiring about my health 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
எடப்பாடி பழனிச்சாமி :
நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று மனதார வாழ்த்திய தமிழக எதிர்க்கட்சி தலைவர் நண்பர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று மனதார வாழ்த்திய தமிழக எதிர்க்கட்சி தலைவர் நண்பர் @EPSTamilNadu திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
அமிதாப்பச்சன் :
உங்கள் அன்பிற்காகவும், என்மீது இத்தகைய அன்பான அக்கறையை காட்டுவதற்காகவும் நண்பர் அமிதாப்பச்சன் அவர்களுக்கு நன்றி.
Thank you @SrBachchan ji for your love and showing such warm concern towards me …truly touched 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
ரஜினிகாந்த் அறிக்கை :
மருத்துவமனையில் இருக்கும் போது. நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும். திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும். பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும். அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024