“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!
காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவாக கண்டறிந்து அவர்கள் கனவில் கூட நினைக்காத அளவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உள்ளூர் முதல் உலக நாட்டு தலைவர்கள் வரை பலரும் தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ராஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் காஷ்மீர் தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது அவர், காஷ்மீர் சம்பவம் கண்டிக்கத்தக்கது என தனது கடும் அதிருப்தியை பதிவு செய்தார்
மேலும் அவர் பேசுகையில், ” காஷ்மீரில் நிலவும் அமைதியை சீர்குலைக்க சிலர் சதி செய்கிறார்கள். இதனை செய்தவர்களையும், அதற்கு பின்னால் இருப்பவர்களுயும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
அவர்கள் கனவில் கூட நினைக்காத தண்டனையை கொடுக்க வேண்டும். சீக்கிரம் இதனை செய்ய வேண்டும். மத்திய அரசு இதனை செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது. ” என ரஜினிகாந்த் பேசினார்.