நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக இன்று செய்தியாளர்கள் சந்திக்கிறார் என்ற வெளியாகிய தகவலை அடுத்து சமூகவலைதளங்களில் ரஜினிகுறித்த #ரஜினியே_எங்கள்_முதல்வர் என்ற ஹேஸ்டேக் ட்ரண்டாகி வருகிறது.
கடந்த வாரம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிரடியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் , கட்சியை எப்போது தொடங்குவது , கட்சி பெயர், கொடி போன்றவை குறித்து இதில் முக்கிய முடிவு எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா அல்லது தனித்து களம் காணலாமா என்பது பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி விவாதித்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றமே ஏற்பட்டதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில், மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன், இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இதன் பின் நடிகர் ரஜினி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலைசரியாக 10.30 மணிக்கு அவர் செய்தியாளர்களை சந்திக்கிரார். தன் வீட்டிற்கு வெளியேயும், விமான நிலையத்தில் மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொட்ங்குவேன் என்ற அறிவிப்புக்கு பின்னர் ஒரு வருடம் கழித்து அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பது இதுவே முதல்முறை.ஆகையால் இந்தச் சந்திப்பில் அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என அரசியல் நோக்கர்கள் மற்றும் தமிழக அரசியல் களமே உற்றுநோக்குகிறது இந்நிலையில் சமூக வலையதளங்களில் #ரஜினியே_எங்கள்_முதல்வர் என்ற ஹேஷ்டேக் ட்ரண்டாகி வருகிறது.
அதே போல் சமூக வலைதளங்களில் இது குறித்த மீம்ஸ்களும் பரவி வருகிறது.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…