ரஜினியின் புதுக்கட்சி பணிகள் வேகமெடுத்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது வரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.தமிழ் சினிமா மட்டும் அல்லாது இந்திய சினிமாவிலும் ரஜினி ஒரு உச்சநட்சத்திரமாகவே போற்றப்பட்டு வருகிறார்.அதற்கு மிக முக்கிய காரணம் ரஜினியின் ரசிகர் பட்டாளம் ஆகும்.இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் என்று என்றால் மிகையாவது.அந்த வகையில் தான் ஆண்டுதோறும் ரஜினி தனது ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார்.
இதன் ஒரு சந்திப்பாக கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதாவது தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.
அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தல் ஆகிய இரண்டிலும் ரஜினி போட்டியிடவில்லை.அவருக்கு பின்னால் கட்சி தொடங்குவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து தேர்தலிலும் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியினை ஓரளவு தாக்கு பிடித்துள்ளார்.
தற்போது தமிழக பாஜக தலைமை காலியாக உள்ள நிலையில் அந்த பதவியை ரஜினி ஏற்பார் என்று தகவல் வெளியாகி வந்தது.இந்த நிலையில் தான் ரஜினியின் புதுக்கட்சி பணிகள் வேகமெடுத்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ராசியான ராகவேந்திரா மண்டபத்தையே கட்சி அலுவலகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் கட்சியை பதிவு செய்யும் பணிகளை துவங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…