எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.
மேலும் அவர் ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் டி.வி. சேனல் துவக்கவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
அதேபோல் ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் கூறுகையில், ‘‘சூப்பர்ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’ ‘தலைவர் டிவி’ என்ற பெயரில் டிரேட்மார்க் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் டி.வி. சேனல் தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம்.சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி ஆகிய 3 பெயர்களையும் பதிவு செய்ததாக தெரிவித்தார்.வேறுயாரும் இந்த பெயரில் பதிவு செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை. கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி பற்றி பேசலாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…