ரஜினிகாந்த் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு பலகை வைரலாக பரவி வருகின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.
மேலும் அவர் ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் டி.வி. சேனல் துவக்கவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
அதேபோல் ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் கூறுகையில், ‘‘சூப்பர்ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’ ‘தலைவர் டிவி’ என்ற பெயரில் டிரேட்மார்க் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் டி.வி. சேனல் தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம்.சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி ஆகிய 3 பெயர்களையும் பதிவு செய்ததாக தெரிவித்தார்.வேறுயாரும் இந்த பெயரில் பதிவு செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை. கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி பற்றி பேசலாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிக்க போகிறார் என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு பலகை ஓன்று வைரலாக பரவி வருகின்றது.அது என்னவென்றால் ’ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது’ என்று, அவரது கடையில் போர்டு வைத்துள்ளார்.இது சமூக வலைத்தளங்களால் வைரலாகி வருகின்றது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…