பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு
நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதிவு ஏற்பு விழா வருகின்ற 30-ஆம் தேதி நடைபெறுகிறது.மேலும் 30-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது.
இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள்,வெளிநாட்டு அதிபர்கள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .நட்புரீதியாக ரஜினிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.