கடலோர மக்கள் இதனை செய்யுங்கள்! ரஜினிகாந்த் வெளியிட்ட புதிய விழிப்புணர்வு வீடியோ!
கடலோர பகுதியில் சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த மார்ச் 4ஆம் தேதியில் 7000 கிமீ சைக்கிள் பேரணியை தொடங்கினர். இந்த பேரணியை சென்னையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
மார்ச் 4இல் சிஐஎஸ்எப்தினத்தை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரையில் சுமார் 7 ஆயிரம் கிமீ தூரத்திற்கு இந்த பயணம் வடிவைக்கப்ட்டது. இதுகுறித்த விழிப்புணர்வு வீடீயோவை நடிகர் ரஜினிகாந்த் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சிஎஸ்ஐஎப் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என கூறினார்.
அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசுகையில், நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் தேவை நிம்மதி சந்தோசம். அதனை கெடுக்க சில பயங்கரவாதிகள் கடல்வழியாக நாட்டிற்குள் புகுந்து சில கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11-இல் நடந்த கோர சம்பவம். இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கிவிட்டது.
கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகப்படும்படியாக உள்ள ஆட்களை அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனில் தகவல் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, 100 சிஐஎஸ்எப் பாதுகாப்புப்படை வீரர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரையில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிமீ சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் உங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்ச தூரம் பயணம் செய்யுங்கள் என விழுப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
“கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” – நடிகர் ரஜினியின் திடீர் வீடியோ#Rajinikanth @rajinikanth @CISFHQrs @IndiaCoastGuard @DDNewslive pic.twitter.com/P51r49Xjly
— DD Tamil News (@DDTamilNews) March 23, 2025