திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் குறிச்சியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியை பார்வையிட்ட ரஜினி மக்கள் மன்றம், பள்ளி முழுவதும் அழகான வண்ணம் பூசி ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் போன்ற வண்ணம் முகப்பு பகுதியில் தீட்டப்பட்டுள்ளது . இதனால் பள்ளி வகுப்பறைகள் ரயில் பெட்டிகள் போன்றே காட்சி அளிக்கிறது. வகுப்பறைகளில் மாணவ மாணவிகள் நுழையும் போது ரயில் பெட்டி வாசலை கைப்பிடி கம்பியை பிடித்து ரயிலில் ஏறி பயணிப்பது போன்ற மனநிலையில் மாணவர்கள் வகுப்பறைக்குள் வரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது. இந்த ஓவியங்கள் காண்போரின் கவனத்தை ஈர்ப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உற்சாகத்துடன் ரயிலில் பயணிப்பது போல் மகிழ்ச்சியாக வந்து செல்கின்றனர். மேலும் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களையும் ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கியுள்ளனர். இதுகுறித்து மன்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது பள்ளி கட்டிடம் மோசமான நிலையை எட்டுவது அறிந்த நாங்கள் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம் என்று கூறினர். இதையடுத்து புதுப் பொலிவு பெற்ற பள்ளியின் திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…