தலைவா நீங்கள் ஆள வேண்டும்..போயஸ் கார்டனில் போஸ்டர்…சம்பவம் இருக்கா!??

Default Image

நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக  இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலையில் தலைவா நீங்கள் ஆள வேண்டும்! என்று  நடிகர் ரஜினி வீட்டின் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image

இது குறித்த தகவல் அனைத்தும் சமீபகாலமாக வெளியாகிய வண்ணம் கடந்த வாரம்  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிரடியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் , கட்சியை எப்போது தொடங்குவது , கட்சி பெயர், கொடி போன்றவை குறித்து இதில் முக்கிய முடிவு எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா அல்லது தனித்து களம் காணலாமா என்பது பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி விவாதித்ததாக தகவல்கள் வெளியானது.

Image result for ரஜினி மாவட்ட செயலாளர்கள்

இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றமே ஏற்பட்டதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில், மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன், இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இதன் பின் நடிகர் ரஜினி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Image result for ரஜினி

இன்று காலைசரியாக  10.30 மணிக்கு அவர் செய்தியாளர்களை சந்திக்கிரார். தன் வீட்டிற்கு வெளியேயும், விமான நிலையத்தில் மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த்  அரசியல் கட்சி தொட்ங்குவேன் என்ற அறிவிப்புக்கு பின்னர் ஒரு வருடம் கழித்து அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பது  இதுவே முதல்முறை.ஆகையால் இந்தச் சந்திப்பில் அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என அரசியல் நோக்கர்கள் என்று தமிழக அரசியல் களமே உற்றுநோக்குகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் அருகே தலைவா நீங்கள் ஆள வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இவர்களுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு இருக்குமா?என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்