ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்போது காந்திய மக்கள் கட்சியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதனிடையே இன்று தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.ரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழருவி மணியன்,காந்திய மக்கள் இயக்கத்தை ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்போது அதனோடு இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு காந்திய மக்கள் கட்சி என்ற கட்சி உருவானது. இதன் முதல் தலைவராக தமிழருவி மணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…