#BREAKING :”அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை” – ரஜினிகாந்த் விளக்கம்
சமூக வலைதளத்தில் பரவும் அறிக்கை என்னுடையது இல்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதற்குள் கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.மேலும் அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அந்த அறிக்கையில் தகவல் இருந்தது. ஆகவே கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்,என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறியுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020