கருணாநிதி சிலை திறப்பு விழா:ரஜினிகாந்த் , கமல்ஹாசனுக்கு அழைப்பு
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை திறக்கப்படுகிறது.கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.