சென்னையில் முக்கியமான இடங்களில் ரஜினிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.
கடந்த சில தினங்களாக, ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நேற்று ரஜினிகாந்த் பெயரில், போலியான அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வந்தது.
அந்த அறிக்கை குறித்து, ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்.’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் சில முக்கிய இடங்களில், ரஜினிக்கு ஆதரவாக சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில், ‘ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’, ‘நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், சென்னை போயஸ் கார்டனில் உள்ள, ரஜினிகாந்தின் இல்லத்தின் முன்பாக, ரசிகர்கள் கூட தொடங்கியுள்ளனர்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…