கதம்..! கதம்…! கதம்…! இந்த தேர்தலில் திமுகவை கதம் செய்வோம் – செல்லூர் ராஜு

ரஜினி மற்றவர்களை மதிப்புடன் நடத்துவார். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அந்த ஒப்பற்ற பண்பை கொண்டவர் ரஜினிதான்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ரஜினி மற்றவர்களை மதிப்புடன் நடத்துவார் என்றும், எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அந்த ஒப்பற்ற பண்பை கொண்டவர் ரஜினிதான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை கதம் செய்வோம் என்று கூறியதோடு, இனிமே வாரிசு அரசியல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!
March 25, 2025
பிசிசிஐ கொடுத்த கிரீன் சிக்னல்… களமிறங்கும் அவேஷ் கான்.! SRH vs LSG போட்டியில் சம்பவம் காத்திருக்கு.!
March 25, 2025