ரஜினி இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இ பாஸ் வாங்கி செல்லும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது.
அண்மையில், நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் கேளம்பாக்கதிற்கு சென்று வந்தார். அவருடன் அவரின் மகள் சவுந்தர்யா, அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் சென்றிருந்தனர். மேலும், ரஜினி கார் ஒட்டிய அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரஜினி இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பது பற்றி ஆய்வு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…