முதல்வர் வேட்பாளர் ரஜினியா?கமலா? முடிவை தெரிவித்த ரஜினிகாந்த்
முதல்வர் வேட்பாளர் முடிவு எப்போது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் அவசியம் ஏற்பட்டால் நானும் ,ரஜினியும் இணைவோம் என்று தெரிவித்தார்.இவரை கூறி சிலமணி நேரங்களிலேயே ரஜினிகாந்தும் ,நானும் கமலும் தமிழகத்தின் நலனுக்காக இணைவோம் என்று தெரிவித்தார்.இவர்கள் இருவரும் கூறியது முதலே இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் இருவர் இணைந்தால் யார் முதல்வர் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் வெகுவாக எழுந்து வந்தது.இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீப்ரியா கூறுகையில் ,ரஜினி-கமல் இணைந்தாலும் என்னுடைய விருப்பம் கமல் முதல்வராக வேண்டும் என்பதுதான் என்று தெரிவித்தார்.இவரது கருத்து மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.இதேபோல் ரஜினி தரப்பில் ரஜினியைத்தான் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் வரும்.
இதற்கு மத்தியில் தான் இன்று கோவாவில் நடைபெற்ற விழாவில் விருதுபெற்று வந்த பின்பு நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவரிடம் கமலுடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.