துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.அப்பொழுது அவர் பேசுகையில்,முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று கூறினார்.ரஜினி இவ்வாறு கூறியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள்,சந்திப்பில் பேசியது என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு அழகிரி பதில் அளிக்கையில்,ஸ்டாலின் உடனான சந்திப்பில் ரஜினியின் தர்பார் குறித்து பேசினோம்.உண்மையைத்தான் சொல்கிறேன்.தர்பார் படம் நன்றாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார்.தர்பார் படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா என்று என்னிடம் கேள்வி கேட்டார்.நான் பார்க்கவில்லை என்று கூறினேன்.
அப்பொழுது துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அழகிரி பதில் கூறுகையில், ரஜினி நல்லவர்.சினிமா என்றால் வசனம் எழுதி கொடுப்பார்கள் .ஆனால் இவர் துக்ளக் விழாவில் சொந்தமாக பேசிவிட்டார்.ரஜினி வாய்தவறி பேசிவிட்டார்.ரஜினி உள்நோக்கத்துடன் பேசியிருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…