பெரியார் குறித்து சர்சைக்குரிய பேச்சு ..!ரஜினி மீது புகார்

Default Image
  • நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
  • ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய மனு அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது வரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.தமிழ் சினிமா மட்டும் அல்லாது இந்திய சினிமாவிலும் ரஜினி ஒரு உச்சநட்சத்திரமாகவே போற்றப்பட்டு வருகிறார்.அதற்கு மிக முக்கிய காரணம் ரஜினியின் ரசிகர் பட்டாளம் ஆகும்.இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் என்று என்றால் மிகையாவது.அந்த வகையில் தான் ஆண்டுதோறும் ரஜினி தனது ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார்

இதன் ஒரு சந்திப்பாக கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதாவது  தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு இடையில் ரஜினி கூறும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.அந்த வகையில்  துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்,.அப்பொழுது அவர் பேசுகையில்  பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என்று  ரஜினி கூறினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்