கமல்ஹாசன் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகாலம் ஆனதை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. அதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என திரை ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் சார்ந்து தனது பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்தார். அதில், ‘ கமல்ஹாசன் எனது கலையுலக அண்ணா. நான் நடத்துனராக இருந்து நடிகனாக கஷ்டத்தை விட கமல் அதிகம் கஷ்டப்பட்டார். திரையுலகில், உதவி இயக்குனர், நடன இயக்குனர் என பல்வேறு கஷ்டங்களை தண்டி கதாநாயகனானார். திரை உலகில், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, நடனம், தயாரிப்பு இயக்கம், நடிப்பு என அனைத்தையும் செய்து 60 ஆண்டுகாலம் நிலைத்து நின்றவர் கமல்ஹாசன் மட்டுமே.’ என தெரிவித்து,
பின்னர் அரசியல், கருத்துக்களை பதிவிட்டார். அப்போது, ‘ 2 வருடத்திற்கு முன்னர், தான் முதல்வராக இருப்போம் என எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்க மாட்டார். ஆனால், அது நடந்தது. தமிழ்க அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது. இன்று நடக்கிறது. அது போல நாளையும் அதிசயம் நடக்கும். ‘ என அதிரடியாக கருத்துக்களை தெரிவித்தார்.
இவரது அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…