2021இல் தமிழக மக்கள் 100க்கு 100 சதவீதம் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்! ரஜினிகாந்த் அதிரடி கருத்து!
கோவாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ICON OF GOLDEN JUBILEE என்ற உயரிய விருதினை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. இந்த விழாவினை தொடர்ந்து தற்போது சென்னை வந்தடைந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த திராவிட மண்ணில் ஆன்மீக அரசியல் எடுபடாது. என்ற கருத்து பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரஜினிகாந்த், ‘ தமிழக அரசியலில் 2021இல் தமிழக மக்கள் 100க்கு 100 சதவீதம் அற்புதத்தை அதிசயத்தை நிகழ்த்துவார்கள்.’ என அதிரடி கருத்தை பதிவிட்டார்.
மேலும், கோவாவில் விருது வழங்கப்பட்டதற்கு தமிழக மக்களுக்கு நன்றி என தெரிவித்தார். மேலும் , கமலுடனான கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. ‘அது கட்சி ஆரம்பித்து பிறகு உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என தெரிவித்தார்.