திருவள்ளுவரும் நானும் ஒரு போதும் காவி சாயதிற்குள் சிக்க மாட்டோம்! – ரஜினிகாந்த் தடாலடி பதில்!
நடிகர் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பாஜகவில் இணைவது குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்க்கு அவர்,’ திருவள்ளுவருக்கு காவி பூசுவது போல எனக்கும் சிலர் காவி வண்ணம் பூசப்பார்க்கிறார்கள். நானும் திருவள்ளுவரும் காவி சாயத்திற்குள் சிக்கமாட்டோம். திருவள்ளுவருக்கு காவி பூசுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் .
பாரதிய ஜனதா எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. என்னை பாரதிய ஜனதா உறுப்பினராக்க முயற்சி நடைபெற்று வருகிறது.’ என கூறினார்.