ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து ரஜினி தான் விளக்கமளிக்க வேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் மீன் அங்காடியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாநிலத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயல்படும்.ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து ரஜினி தான் விளக்கமளிக்க வேண்டும்.
மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று தமிழக சட்டமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.