விரைவில் முடிவை அறிவிப்பேன் எனக்கூறிய ரஜினி ! திடீரென சந்தித்த தமிழருவி மணியன்
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று ரஜினி கூறிய நிலையில், இன்று அவரை தமிழருவி மணியன் சந்தித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்களில் ஒரு பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.ஆனால் அண்மையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அதற்குள் கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.மேலும் அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அந்த அறிக்கையில் தகவல் இருந்தது.ஆனால் ,என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறினார்.
ஆகவே நவம்பர் 30-ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது.ஆலோசனை நடைபெற்று முடிந்த பின் சென்னை போயாஸ் கார்டனில் உள்ள அவர் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவர்களுடைய கருத்தை கூறினார்கள்.நான் என்னுடைய கருத்தை கூறினேன்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று கூறினார். இதனால் ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்தது.இந்நிலையில் தான் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.