ட்விட்டர் நீக்கிய பதிவிற்கு பதிலளித்துள்ள ரஜினி.!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் கொரோனா மற்றும் ஊடரங்கு குறித்து ஒரு வீடியோவை நேற்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
ரஜினி வெளியிட்ட அந்த வீடியோவானது, தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியது. இந்நிலையில், நீக்கப்பட்ட அந்த பதிவு குறித்து ரஜினி ட்விட்டரில் கூறியதாவது, “நேற்று பதிவு செய்த காணொளியில் 12 -14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்குச் செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால் அது, “இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்” என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது என கூறினார்.
#IndiaFightsCoronavirus #StayAtHome #StaySafe pic.twitter.com/Jg2dgyuBh6
— Rajinikanth (@rajinikanth) March 22, 2020