3வது முறையாக இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம்.!
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை இன்று காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார். இந்த கூட்டத்தில் ரஜினி கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.